உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளர் காலமானார்?
சென்னை உயர்நீதிமன்ற மூத்த செய்தியாளரான பணியாற்றிவந்தவர் பி.எஸ்.எல்.பிரசாத் (வயது65). இவர் பிடிஐ செய்தி நிறுவனத்துக்காக சென்னை உயர்நீதிமன்ற செய்தியாளராக பணியாற்றி வந்தார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர் நேற்று இரவு அவரது இல்லத்தில் காலமானார்.
இவர் இறப்பு செய்தியை கேட்டு உயர் நீதிமன்ற நீதிபதிகளும் மற்ற செய்தியாளர்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.ஊரடங்கு காலமென்பதால் குறிப்பிட்ட கால இடைவெளியில் சென்று அவரது உடலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் செய்தியாளர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இவரின் உடல் இன்று மதியம் 3 மணியளவில் ஆவடியில் உள்ள மின் மயானத்தில் அடக்கம் செய்யப் படுவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.