Deprecated: Required parameter $post_id follows optional parameter $data in /home/dhinaindia.com/public_html/wp-content/plugins/reviewer/public/class-reviewer.php on line 360

Deprecated: Required parameter $review_id follows optional parameter $data in /home/dhinaindia.com/public_html/wp-content/plugins/reviewer/public/class-reviewer.php on line 360

Deprecated: Required parameter $template follows optional parameter $scores in /home/dhinaindia.com/public_html/wp-content/plugins/reviewer/admin/includes/class-users-ratings-page.php on line 987
2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்? – Dhina India-Tamil News Online Live Today | Breaking News | National News | Political News | Sports News | Cinema News | World News | Business News

State

2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?

2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?

Published on

2000 ரூபாய் பணத்துக்காக தாயே அடித்துக்கொன்ற மகன்கள்?

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டி பகுதியைச் சேர்ந்த கணேசன் சரோஜா என்னும் தம்பதிக்கு விக்னேஷ் (வயது 27) அருண்குமார் (வயது 23) என்னும் இரண்டு மகன்கள் உள்ளனர்.இவர்களின் தந்தை கணேஷ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.தந்தை இறந்த பிறகு தாயுடன் குடிபோதைக்கு அடிமையான இரண்டு மகன்களும் வாழ்ந்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று குடிபோதையில் வீட்டுக்கு வந்த இரண்டு மகன்களும் வீட்டில் வைத்திருந்த 2000 ரூபாய் பணத்தை தேடி உள்ளனர்.தேடி பணம் கிடைக்காததால் தன் தாயிடம் கேட்டபொழுது வீட்டு செலவிற்காக அதை தான் எடுத்து செலவு செய்துவிட்டதாக கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த இருவரும் தாயை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்தபோது தாயை மருத்துவமனைக்கு கொண்டு செல்வது போல் எடுத்துச்சென்றுள்ளனர்.
பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் சார்பில் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

விரைந்து வந்த காவல்துறையினர் சூரம்பட்டிவலசு சுடுகாட்டில் இந்த இரண்டு நபர்களும் இருப்பதாக தகவல் வந்தது.சந்தேகத்தின் அடிப்படையில் அங்கு சென்று பார்த்த பொழுது தாய் மருத்துவமனைக்கு கூட்டிச் செல்லும் வழியிலேயே இறந்து விட்டதால் யாருக்கும் தெரியாமல் புதைத்து விட வேண்டும் என்று அந்த சுடுகாட்டில் தாயை புதைத்து உள்ளனர்.

பின்பு போலீசார் அடக்கம் செய்த தாயின் உடலை மீண்டும் தோண்டி எடுத்து ஈரோடு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மேலும் இந்தகுடிபோதை மகன்களை போலீசார் கைது செய்து அவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version