Sports

தென்னாப்பிரிக்க அணிக்கு வாழ்வா ? சாவா? நியூசிலாந்தைச் சமாளிக்குமா? #NZvSA

Published on

ICC World Cup 2019 | New Zealand vs South Africa | நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து களம் காண்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சமாக இருக்கக்கூடும்.

உலகக் கோப்பைத் தொடரில் வாழ்வா ? சாவா என்ற நெருக்கடியான நிலையில் வலுவான நியூசிலாந்து அணியை தென்னாப்பிரிக்க அணி இன்று எதிர்கொள்கிறது.

உலகக் கோப்பைத் போட்டித் தொடரில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தென்னாப்பிரிக்க அணி துவக்கத்திலேயே சறுக்கலை சந்தித்துள்ளது.

இதுவரை 5 போட்டிகளில் விளையாடி 3 புள்ளிகளை மட்டும் பெற்று புள்ளிப்பட்டியலில் 8-வது இடத்தில் தென்னாப்பிரிக்க அணி பின்தங்கியுள்ளது. இன்னும் நான்கு போட்டிகள் மட்டும் எஞ்சியுள்ள நிலையில், அடுத்த 4 போட்டிகளை வென்றால் மட்டுமே அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற இக்கட்டான சூழலில் தென்னாப்பிரிக்கா உள்ளது.

பிர்மிங்ஹாமில் எட்ஜ்பேஸ்டன் மைதானத்தில் இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் நியூசிலாந்தை தென்னாப்பிரிக்கா எதிர்கொள்கிறது.

தென்னாப்பிரிக்காவுக்கு வாழ்வா சாவா என்ற இந்த போட்டி மிக வலுவான நிலையில் உள்ள நியூசிலாந்துடன் மோதுகிறது. இந்த போட்டியில் தோற்றால் தென்னாப்பிரிக்காவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படும் என்பதால் முழுத்திறனை வெளிப்படுத்த அந்த அணி போராடும்.

நியூசிலாந்து அணியோ 4 போட்டிகளில் 7 புள்ளிகளை பெற்று அரையிறுதி பந்தயத்தில் முன்னணியில் உள்ளது. இந்தியாவுடான போட்டி ரத்தானதால் 10 நாள் இடைவெளிக்குப் பிறகு நியூசிலாந்து களம் காண்பது தென்னாப்பிரிக்காவுக்கு சாதகமான அம்சமாக இருக்கக்கூடும்.

இந்தநிலையில், மழையின் காரணமாக டாஸ் போடுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது. அதனால், போட்டி நடைபெறுமா என்று கேள்வி எழுந்துள்ளது.

Trending

Exit mobile version