நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை! கல்வித்துறை அமைச்சர் அதிரடி
நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு இத்தேர்வு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. குறிப்பாக சில மாநிலங்களில் கேள்வித்தாள் வெளியானது, கேள்வித்தாளில் பதில் எழுதி தர பணம் பெற்றது, சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்த வண்ணமேயுள்ளது.
இந்நிலையில் நீட் தேர்வு விவகாரத்தில் யார் தவறு செய்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தர்மேந்திரபிரதான் தெரிவித்துள்ளார். தேர்வு மையத்தில் உரிய நேரம் வழங்கப்படவில்லை என சில மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கியதில் மத்திய அரசுக்கு உடன்பாடு இல்லையென்றும், நீதிமன்றம் அளித்த உத்தரவின் படி அம்மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.