இந்திய – சீன எல்லையான கிழக்கு லடாக் பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் சீன படைகள் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து பின்வாங்கி வருகின்றனர்.சீன இராணுவத்தினர் கூடாரங்களையும் ,கட்டமைப்புகளையும் கண்காணிப்பு மையம் 14 ல்
இருந்து பின்வாங்கி வருவதாக மத்திய அரசு தகவல்களை தெரிவித்துள்ளனர்.
ஜூன் 30 ஆம் தேதி இந்தியா சீனா எல்லை விவகாரத்திற்கு இரு தரப்பிற்கும் இடையே பேச்சு வார்த்தை நடைபெற்றது.இந்த பேச்சு வார்த்தைகளின் அடிப்படையில் சீனா பின்வாங்க தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கல்வான்,ஹாட்ஸ்பிரிங்ஸ் மற்றும் கோக்ரா பகுதிகளில் இருந்து சீன படைகள் பின் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் ஃபிங்கர் 4 மற்றும் ஒய்-ஜங்சன் பகுதிகளில் இருந்து சீனப் படைகள் பின்வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு சீன படைகள்
ஃபிங்கர் 4, பங்கோங் ட்ஸோவின் வடக்கு ஃபிளாங்க், கோக்ரா முகாம், கண்காணிப்புக் கோபுரம் 14 மற்றும் 5, கல்வான் பள்ளத்தாக்கு, ஒய்-ஜங்ஷன் ஆகிய கிழக்கு லடாக் பகுதியில் சீன படைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது.