Religion

நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்

Published on

நாம் மனதில் நினைத்ததை நிறைவேற்றும் கணேச ஸ்தோத்திரம்

விநாயகப் பெருமானுக்கே உரிய இந்த  சக்திவாய்ந்த ஸ்தோத்திரத்தை பக்தியுடன் தினமும் துதிப்பதால் நீங்கள் மனதில் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். மேலும் காரியத்தடை, தாமதம் போன்றவைகள் நீங்கும் என்றும் கூறப்படுகிறது.

விநாயகப் பெருமானை வழிபட்டு செய்யப்படும் எந்த ஒரு காரியமும் சிறப்பான வெற்றிகளையும், விரும்பிய பலன்களும் தரவல்லதாக இருக்கிறது.

கணேச ஸ்தோத்திரம்

வினாயகோ விக்னராஜோ கௌரீபுத்ரோ
கணேஸ்வர ஸ்கம்தாக்ரஜோவ்யயஃ பூதோ
தக்ஷோ‌உத்யக்ஷோ த்விஜப்ரிய
அக்னிகர்வச்சிதிம்த்ரஸ்ரீப்ரதோ வாணீப்ரதோ‌உவ்யய
ஸர்வஸித்திப்ரதஸ்ஸர்வதனயஃ ஸர்வரீப்ரிய
ஸர்வாத்மகஃ ஸ்றுஷ்டிகர்தா தேவோனேகார்சிதஸ்ஸிவ
ஸுத்தோ புத்திப்ரியஸ்ஸாம்தோ ப்ரஹ்மசாரீ
கஜானன த்வைமாத்ரேயோ முனிஸ்துத்யோ
பக்தவிக்னவினாஸன ஏகதம்தஸ்சதுர்பாஹுஸ்சதுரஸ்ஸக்திஸம்யுத
லம்போதரஸ்ஸூர்பகர்ணோ ஹரர்ப்ரஹ்ம விதுத்தம
காலோ க்ரஹபதிஃ காமீ ஸோமஸூர்யாக்னிலோசன
பாஸாம்குஸதரஸ்சம்டோ குணாதீதோ னிரம்ஜன
அகல்மஷஸ்ஸ்வயம்ஸித்தஸ்ஸித்தார்சிதபதாம்புஜ
பீஜபூரபலாஸக்தோ வரதஸ்ஸாஸ்வதஃ க்றுதீ த்விஜப்ரியோ
வீதபயோ கதீ சக்ரீக்ஷுசாபத்றுத் ஸ்ரீதோஜ உத்பலகரஃ
ஸ்ரீபதிஃ ஸ்துதிஹர்ஷித குலாத்ரிபேத்தா ஜடிலஃ கலிகல்மஷனாஸன
சம்த்ரசூடாமணிஃ காம்தஃ பாபஹாரீ ஸமாஹித
அஸ்ரிதஸ்ரீகரஸ்ஸௌம்யோ பக்தவாம்சிததாயக
ஸாம்தஃ கைவல்யஸுகதஸ்ஸச்சிதானம்தவிக்ரஹ
ஜ்ஞானீ தயாயுதோ தாம்தோ ப்ரஹ்மத்வேஷவிவர்ஜித
ப்ரமத்ததைத்யபயதஃ ஸ்ரீகம்டோ விபுதேஸ்வர
ரமார்சிதோவிதிர்னாகராஜயஜ்ஞோபவீதவான் ஸ்தூலகம்டஃ
ஸ்வயம்கர்தா ஸாமகோஷப்ரியஃ பர ஸ்தூலதும்டோ‌உக்ரணீர்தீரோ
வாகீஸஸ்ஸித்திதாயக தூர்வாபில்வப்ரியோ‌உவ்யக்தமூர்திரத்புதமூர்திமான்
ஸைலேம்த்ரதனுஜோத்ஸம்ககேலனோத்ஸுகமானஸ
ஸ்வலாவண்யஸுதாஸாரோ ஜிதமன்மதவிக்ரஹ
ஸமஸ்தஜகதாதாரோ மாயீ மூஷகவாஹன ஹ்றுஷ்டஸ்துஷ்டஃ
ப்ரஸன்னாத்மா ஸர்வஸித்திப்ரதாயக அஷ்டோத்தரஸதேனைவம்
னாம்னாம் விக்னேஸ்வரம் விபும் துஷ்டாவ ஸம்கரஃ
புத்ரம் த்ரிபுரம் ஹம்துமுத்யத யஃ பூஜயேதனேனைவ
பக்த்யா ஸித்திவினாயகம் தூர்வாதளைர்பில்வபத்ரைஃ
புஷ்பைர்வா சம்தனாக்ஷதை ஸர்வான்காமானவாப்னோதி
ஸர்வவிக்னைஃ ப்ரமுச்யதே

இது கணேசன் என்கிற ஒரு பெயரைக் கொண்ட கணபதியாகிய விநாயகப் பெருமானுக்குரிய சக்திவாய்ந்த ஸ்தோத்திரம். இந்த ஸ்தோத்திரத்தை தினமும் பக்தியுடன் காலையில் 3 அல்லது 9 முறை நல்லது புதன் கிழமைகள் மற்றும் மாதந்தோறும் வரும் சங்கடஹர சதுர்த்தி தினங்களில் விநாயகர் கோவிலுக்கு சென்று, விநாயகருக்கு அருகம்புல் மாலை சாற்றி, நெய் தீபமேற்றி, தூபங்கள் கொளுத்தி, இந்த ஸ்தோத்திரத்தை துதிப்பதால் நீங்கள் விரும்பிய அனைத்தும் விரைவில் நிறைவேறும். காரியத்தடை, தாமதம் போன்றவைகள் நீங்கும். 

Trending

Exit mobile version